சுன்னாகம் பிரதேச குடி நீர் பாவனைக்கு உகந்தது என தெரிவிக்க முடியாதுதுள்ளது – தேசிய நீர் வழங்கல் சபை சுட்டிக்காட்டு!

Sunday, January 17th, 2021

சுன்னாகம் பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் குழாய்க்கிணறு நீரை குடிக்கலாமா? குடிக்க முடியாத ? என சொல்வதில் சிக்கல் இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல் குறித்த பகுதியில் உள்ள நீரினை குடிக்கலாமா? என சிவில் அமைப்பு பிரதிநிதிகள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது சுன்னாகம் பகுதியில் உளள குடிநீரில் கழிவு ஓயில் தாக்கம் இருக்குதா? இல்லையா? என ஆய்வு செய்வதற்கு தம்மிடம் நிதி இல்லை எனவும் யாராவது முன்வந்து குறித்த பகுதியில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்வதற்கு நிதி அனுசரணை வழங்கினால் ஆய்வு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது சுன்னாக பகுதிக் குடிநீரை பருக முடியுமா எனக் கேட்டால் அதனை சொல்வதில் சிக்கல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: