தீபாவளியை பயன்படுத்தி வியாபார நோக்கத்தை நிறைவு செய்யாதீர்கள்.! -அகில இலங்கை இந்து மா மன்றம்
Friday, October 28th, 2016
தீபாவளி என்ற பெயரைப் பாவித்து ஹோட்டல்கள் மற்றும் ஸ்தாபனங்கள் தமது வியாபார நோக்கத்தை நிறைவு செய்வதற்காக இந்து மக்களின் மனங்களை புண்படுத்தக்கூடாது என்று அகில இலங்கை இந்து மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மா மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தீபாவளித் திருநாளை விசேட அசைவ உணவுகளுடன் கொண்டாட முடியுமென சில ஹோட்டல்கள் புதினப் பத்திரிகையில் விளம்பரப்படுத்தியுள்ளதாக எமது அங்கத்துவ சங்கங்களின் உறுப்பினர்கள் பலர் எமது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இது தீபாவளியை அனுஷ்டிக்கும் உண்மையான மார்க்கமாகாது என்பதை நாம் மனவேதனையுடன் தெரிவிக்கின்றோம். எமது சமயம் பிராணிகளை வதை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவில்லை.
எனவே அசைவ உணவு மற்றும் மதுபானங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை எமது மரபாக ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே ஹோட்டல் மற்றும் ஸ்தாபனங்கள் தீபாவளி என்ற பெயரைப் பாவித்து தமது வியாபார நோக்கத்தை நிறைவு செய்வதற்காக இந்து மக்களின் மனங்களைப் புண்படுத்தக்கூடாதெனச் சுட்டிக்காட்டுகின் றோம்.

Related posts:
அதிகரித்த மழை : 49 குளங்கள் சேதம்!
நோர்வே - இலங்கை இடையில் நல்லுறவு வலுவடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவிப்பு!
பொலிசாருக்கு எதிராக ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!
|
|
|


