சீன அரசாங்கம் வழங்கிய டீசல் இலங்கை விவசாயிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது!

Monday, January 9th, 2023

சீன அரசாங்கத்தினால் வழங்கபட்ட இலவச டீசலை இலங்கை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடு இன்று (9) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக சீனா 10.06 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இணையவழியாக அனுப்பப்பட்ட பற்றுச்சீட்டை காண்பித்து, விவசாயிகள் எரிபொருளை பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை விவசாயிகளுக்கு அறுவடைக்காக, ஹெக்டேயருக்கு 15 லீற்றர் வீதம் டீசல் வழங்கப்படுகிறது.

000

Related posts: