வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 11th, 2021

வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கையூட்டல் மற்றும் மோசடி ஆகியனவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மீண்டும் பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதங்கள் ஏற்படாதவகையில் நாட்டைப் பாதுகாப்பதில் தாம் உறுதியுடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்த அவர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும்.

அதிகளவான மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர். அதனூடாக அதிகளவு அந்நியச் செலாவணி எமக்குக் கிடைக்கின்றது. அதற்காகக் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எதிர்வரும் வருடங்களில் நாட்டை சுபீட்சத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை

தாமும் தமது அரசாங்கமும் எதிர்பார்த்ததை போன்று செயற்படவில்லை என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதை உறுதிப்படுத்துவதாகவும்  ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

000

Related posts: