விலைக் கட்டுப்பாட்டை மீறிய 180  மருந்தகங்கள் தொடர்பாக முறைப்பாடுகள்!

Friday, November 18th, 2016
நாட்டில் விலைக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கத் தவறிய மருந்தகங்கள் தொடர்பில் 180 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மருந்து பொருட்களை விற்பனை செய்யாதிருத்தல், விலையை குறைக்காதிருத்தல் போன்ற முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்பாடுகளின் அடிப்படையில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் ஊடாக உரிய நிறுவனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசியமானவையாக கருதப்படும் 48 மருந்து வகைகளின் விலைகளை அரசாங்கம் குறைத்திருந்தது. இரண்டாவது கட்டத்தின் கீழ் மேலும் பல மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும்.
விலை குறைப்பை மேற்கொள்ளாத மருந்தகங்கள் பற்றிய முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள பிரத்தியேகப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை இயங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தொலைபேசி இலக்கங்களான 0113 071 073 அல்லது 0113 092 269 ஆகியவை மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

508050bc5eac3b807d5fa8da13caf391_XL

Related posts: