சிவநேசன் M.P.க்கு இதுவரை ஏன் சிலை நிறுவப்படவில்லை – கரவெட்டி மக்கள் கேள்வி!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தந்தை செல்வா, சிவசிதம்பரம், ரவிராஜ் ஆகியோருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள போது எமது பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசன் M.P..க்கு சிலை அமைப்பதற்கு இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வராதது ஏன் என்று கரவெட்டி பகுதி மக்கள், ஆக்ரோசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட சிவநேசன் M.P.க்கு சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் பகுதியில் வாலிபர் விளையாட்டுக்கழக தலைவர் செல்வராசா பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் அவர்களிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்களது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தந்தை செல்வா, சிவசிதம்பரம், ரவிராஜ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக அவர்களது பிரதேசங்களில் நினைவு சிலைகள் அமைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினரான சிவநேசன் M.P. கடந்த 2008 ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி வன்னி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மக்களது செவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட சிவநேசன் M.P.க்கு அவரது சேவையை நினைவு கூரும் முகமாக சிலை நிறுவப்படவில்லை. அதற்கான முயற்சிகளைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டதும் கிடையாது. இது அவர்களது மேலாதிக்க செயற்பாடுகளின் வெளிப்பாடாக உள்ளது என குறித்தபகுதி குற்றம் சாட்டியுள்ளனர்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களது ஒன்பதாவது சிரார்த்த தினம் இன்றாகும்.
Related posts:
|
|