சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பேருந்து நிலையம் முன்பாக பெண்கள் அமைப்புகள் போராட்டம்!

Friday, July 23rd, 2021

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி நாளை காலை 9.30 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மகளிர் அமைப்புக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு நாளையதினம் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள அதேவேளை இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

000

Related posts: