செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Monday, December 11th, 2023

செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்றுமுதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகள் கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், அது உடனடியாக தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை முன்னர் அறிவித்திருந்தது.

இது தொடர்பில் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நொயெல் பிரியந்த முன்னர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்,

நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி செயற்படுத்துவதற்கு தயார் நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது, மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தரவுகளின் படி, நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 97.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி நாளாந்த நீர் மின் உற்பத்தி 63 வீதமாகவும் அனல் மின் நிலையங்கள் ஊடாக 15.70 வீதமாகவும் மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: