வெற்றிகரமாக வழங்கப்பட்டது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க!

Tuesday, April 13th, 2021

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

ஏறக்குறைய மூன்று மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இந்த உதவி வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்திருந்தது.

அதன்படி, சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது

இதன் கீழ் இதுவரையில் 12 இலட்சத்து 33 ஆயிரத்து 55 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 178 குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற்றிருந்தனர்.

அதேவேளை அனைத்த மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

குறித்த பணிகள் நேற்றையதினம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கமைய, 11 இலட்சம் குடும்பங்களுக்கு நேற்றையதினம் 5,000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த நிவாரண கொடுப்பனவை கொடுப்பதற்கு கையிருப்பில் இருந்த நிதிப்பற்றாக்குறை மற்றும் அதனை விநியோகிக்கும் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்காமை உள்ளிட்ட காரணிகளால் நேற்று பல்வேறு இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இன்றையதினமும் 5,000 ரூபா புத்தாண்டு நிவாரண கொடுப்பனவை வழங்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவற்றில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளை கொண்ட நபர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பார்களாயின் அந்த குடும்பத்திற்கு ஒரு 5,000 ரூபா மாத்திரமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: