சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை – ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முந்நூற்று தொண்ணூற்று இரண்டு பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே பதிலளித்துள்ளதாகவும் தகவல்!

Sunday, November 20th, 2022

ஒரு ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்க தேசிய கல்வி சர்வதேசப் பாடசாலைகளின் ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் செய்யப்பட்ட தகவல்களுக்கு, அமைய முந்நூற்று தொண்ணூற்று இரண்டு சர்வதேச பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே பதிலளித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் கடந்த ஜனவரி மாதம் அழைக்கப்பட்டு அதன் பிறகு ஆணைக்குழு அவ்வப்போது நினைவூட்டல்களை அளித்துள்ளது. எனினும், ஏனைய பாடசாலைகள் எதுவும் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் சர்வதேசப் பாடசாலைகளில் உள்ள பாரிய குறைபாடுகள் வெளிப்பட்டு வருவதால் பதிலளிக்கவில்லை எனவும் கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சர்வதேச பாடசாலைகளுக்கு தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு கற்பித்தலை கட்டாயமாக்கி 2013 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அமைச்சு எவ்வித தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அந்தப் பாடசாலைகளை கண்காணிப்பதற்கான சட்ட அதிகாரசபை இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது தொடர்பில் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகார சபையொன்றை நிறுவுவது தொடர்பாகவும் அமைச்சு கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: