எட்டு தமிழ் குழுக்களின் ஹர்தால் பிசுபிசுப்பு – வழமைபோன்று 98 சத வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை – மக்களும் தமது நடவடிக்கைகளை வழைபோன்று முன்னெடுப்பு !

Friday, October 20th, 2023

வடக்கு கிழக்கில் இன்றையதினம் பூரண ஹர்த்தாலுக்கு அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில நகர்ப் புறங்களை தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் அதனை பெரிதளவு கண்டுகொள்ளது வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது

இதனால்  எட்டு கட்சிகள் என கூறப்படும் தரப்பினரது கோரிக்கையை மக்கள் அதிகளவில் புறக்கணித்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலை வலுவிழக்கச் செய்துள்ளனர் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேநேரம் வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 சதவீத வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் தமிழ் கட்சிகளினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தமிழ் கட்சிகள் விடுத்த அறிக்கையில், பாடசாலைகளையும் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்   அவர்களது கோரிக்கையை கல்விச் சமூகம் புறக்கணித்து பாடசாலைகள் வழமை போல இயங்கியதுடன் எதுவித பாதிப்புகளும் இன்றி பரிட்சைகளும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது..

இதேநேரம் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் தவணை பரீட்சை இடம் பெறுகின்றதன் காரணமாக வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 வீதமான மாணவர்களின் வருகை காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் வருகை சில பாடசாலைகளில் குறைவடைந்துள்ள போதிலும் தீவக வலயம் உள்ளிட்ட சகல பாடசாலைகளிலும் 98 வீதமான மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேநேரம் வழமை போன்று இலங்கை போக்குவரத்து சபை தமது சேவையை குடாநாடு முழுவதும் எதுவித இடர்பாடகளும் இன்றி மேற்கொண்டிருந்தனர். பயணிகளும் கணிசமானளவு சென்றுவரவதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் முச்சக்கர வண்டிகளும் தமது சேவையை முன்னெடுத்திருந்தனர்

அதேபோன்று அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பனவும் வழமைபோன்று தமது சேவைகளை முன்னெடுத்திருந்தனர்.

யாழ் நகர பகுதியில் வழமைபோன்று காலை வேளைகளில் கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் மதியத்தின் பின்னர் பழக்கடைகள் அநேக கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் இன்றைய ஹர்தாலுக்க பூரண ஒத்துழைப்பு வேண்டி வீடு வீடாக ஊர் உராக பிரசாரம் செய்த அந்த எட்டு தமிழ் அரசியல் குழுக்களையும் மக்கள் புறக்கணித்து தமது இயல்பான செயற்பாட்டை முன்னெடுத்திருந்ததாக அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கிழக்கு மாகணத்தின் அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியதுன் இம்மாவட்டத்தில்  வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

000

Related posts: