சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி!

Monday, November 14th, 2022

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியை அடைந்து பிரதான வீதியை ஊடாக மாவட்ட செயலகத்தை அடைந்தது.  அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றும் நடைபெற்றது

பேரணியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் மக்களிடையே  நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: