சந்தர்ப்பத்தை கைவிட வேண்டாம் – முதலீட்டாளர்களை கோரும் நிதியமைச்சர் ரவி கரணாநாயக்க!

Saturday, March 18th, 2017

பொருளாதார சுபீட்சத்தை நோக்கிச் செல்லும் இலங்கையில் உருவாகும் வர்த்தக சந்தர்ப்பங்களை கைவிட வேண்டாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உலகில் உள்ள சகல முதலீட்டாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெறும் இலங்கை முதலீட்டு மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் இதுவரை இருந்து வந்த பாரம்பரிய விவசாயத்தை வர்த்தக விவசாயத்துறையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் பல்வேறு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மேலும் கொழும்பு சர்வதேச நிதியியல் நகரத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளதால், நாட்டின் பூகோள இருப்பிடத்தை பிரயோசத்திற்கு எடுத்துக்கொண்டு அதில் வர்த்தகங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான சனத் தொகைக்கு விநியோகத்தை வழங்க முதலீடுகளை செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: