க.பொ.த உயர் தரப் பரீட்சை தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“எதிர்வரும் ஒக்டோபர் 12 அம் திகதிமுதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 2,648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும்.

இதேவேளை, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 11 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,936 நிலையங்களில் நடைபெறும்.

இந்த பரீட்சைகளின் போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: