நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்டது வீதி!

Monday, October 30th, 2017

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்த விவாதத்தில் ஆளுங்கட்சியுடன் த.​தே.கூட்டமைப்பு மற்றும் ம.வி.முன்னணி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கு எதிராக விவாதத்தில் கலந்து கொண்டுள்ளது.

இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தி வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் படும் அவல நிலை ! - ஓர் சிரேஷ்ட பிரயையின் ஆதங்க...
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவிப...
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கல்வி அமைச...