தொடரும் சீரற்ற காலநிலை – அறுவடைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு!
Wednesday, February 1st, 2023
மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது
குறிப்பாக மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்ட நெற்செய்கைகள் சரிந்துள்ளதுடன் வயல் நிலங்களுக்குள் நீரும் அதிகளவு தேங்கியுள்ளது.
இதேநேரம் அறுவடையின் பின்னர் வீதிகளில் உலர விடப்பட்டிருந்த பல தொன் நெல் முற்றுமுழுதாக மழையில் நனைதுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே பசளை, உரம், ஏரிபொருள் விலை என அனைத்தின் விலையேற்றத்தின் மத்தியிலும் விவசாய செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் நெல் மிகவும் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக மன்னார் கிளிநொச்சி மாவட்ட ஏழை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் - சிவில் அமைப்புக்கள்
அன்று குடிநீர் , பொருளாதார மையம்!... இன்று வீட்டுத்திட்டம் ! ... மக்களை வதைக்கின்றது கூட்டமைப்பு - ...
உளவளத்துணை டிப்ளோமாதாரிகளும் நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் - கல்வியமைச்சிடம் கோரிக்கை!
|
|
|


