கோப், கோபா மற்றும் ஏனைய குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சபைத் தலைவரின் பிரேரணைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்!

Wednesday, June 8th, 2022

கோப், கோபா மற்றும் ஏனைய குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சபைத் தலைவரின் பிரேரணைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த பூர்வாங்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழு (கோபா) மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) ஆகியவற்றின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையும் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது.

சபைத் தலைவர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில், கோப் மற்றும் கோபா குழுவின் உறுப்பினர்கள் எவரும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற திருத்தமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: