மீண்டும் அரிசி விற்பனையில் கட்டுப்பாட்டு விலை!

Friday, December 22nd, 2017

நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கமைய அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் வாழ்க்கைச் செலவுபற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் படி ஒரு கிலோ நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74 ரூபாவாகும். எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோருக்குநிவாரண விலையில் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக சதொச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அரிசியை இறக்குமதி செய்வதென குழுவின்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தேவையேற்படும் போது ஏனைய வகை அரிசிகளுக்கும் உயர்ந்தபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதின் குறிப்பிட்டுள்ளார். கூடுதலானவிலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

Related posts: