காணாமற்போனோர் தொடர்பாக, 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் – ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு!

Monday, December 5th, 2022

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் அலுவலகத்திற்கு 1969ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் காணாமற்போனோர் தொடர்பாக 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

குறித்த முறைகளில் தெரிவுசெய்யப்பட்ட ஆறாயிரத்து 78 முறைப்பாடுகள் பற்றிய ஆரம்ப கட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆயிரத்து 710 முறைப்பாடுகளின் விசாரணை பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கிளிநொச்சியில் இன்றும் விசாரணைகளை மேற்கொண்டனர்

இந்த விசாரணை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பயிற்சி நிலைய கட்டடத்தொகுதியில் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றது. காணாமல் போனோர்களின் உறவினர்கள் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: