பிணைமுறி இலாபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கும் பங்கு வழங்கப்பட்டுள்ளது!

Friday, August 18th, 2017

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உழைத்த இலாபத்தில் இருந்து பங்கொன்று மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தெரிய வந்துள்ளது.

பிணைமுறி ஆணைக்குழு இன்று கூடிய போது பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

2016ம் ஆண்டில் சர்ச்சைக்குறிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உழைத்த இலாபத்தில் 34 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி அர்ஜுன் எலோசியஸ் மற்றும் அவரின் தந்தை பணிப்பாளராக இருக்கும் நிறுவனமொன்றுக்கும் இலாபமாக பங்கீடு செய்யப்பட்டதாக கசுன் பலிசேன கூறியுள்ளார்.

இதேவேளை திறைசேரி பிணைமுறி வழங்கல் சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அடுத்த விசாரணை நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்கு பிற்போடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 25ம் திகதி காலை 10 மணிக்கு ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது.

Related posts: