கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று(22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டெர்மினல்களை நிர்மாணிப்பதால் மட்டும் துறைமுகம் உருவாகாது என குறிப்பிட்டார்.
கிழக்கு முனையத்தின் முதல் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏனைய தனியார் டெர்மினல்களுடன் போட்டியிட்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என நம்புவதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் - அமைச்சர் ஜோன் அமரதுங்க!
"Best of Sri Lanka closed for 2017" விருது நிகழ்வு
பஸ், ரயில் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகம்!
|
|