பஸ், ரயில் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகம்!

Saturday, July 7th, 2018

இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய நவீன வசதிகள் மூலம் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ், ரயில் மற்றும் பொதுவாக வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய முற்பண கொடுப்பனவு அட்டை ஒன்று 3 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அட்டையின் ஊடாக மீதிப்பணம் செலுத்தும் பிரச்சினைகள், மாற்று பணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

அதற்கமைய முழுமையான போக்குவரத்து சேவைகளின் தரவுகள் மற்றும் முழுமையான போக்குவரத்து வீதிகளின் தரவுகள் அடங்கிய தகவல் கட்டமைப்பு ஒன்று 6 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகிள் வரைபடம் ஊடாக இந்த தகவல் கட்டமைப்பின் தகவல்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் இந்த தகவல் கட்டமைப்பின் ஊடாக பேருந்து கட்டணம், செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக நெருங்கக்கூடிய வீதிகள் மற்றும் போக்குவரத்து சேவை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து 20 வீதம் பஸ் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சொகுசு மற்றும் அதிசொகுசு போக்குவரத்து சேவைகளின் கட்டணங்கள் பெரியளவில் அதிகரித்துள்ளமையால் அந்த கட்டணத்தை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: