கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் அறிவுரை!
Monday, April 4th, 2022இலங்கையில் கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜூலை மாதம் அளவில் பெருந்தொகையான கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் என சுட்டிக்காட்டிய அவர் ,எனவே, அதற்கு முன்னதாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றிக்கொண்டுள்ளனர். இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75 வீதமாக காணப்படுகின்றது.
எனினும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 55 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 200 என்ற அளவில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றிக் கொள்ளல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் ஆகிய காரணிகளினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையை குறைந்தளவில் பேண முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்திலும் இந்த நிலைமையை பேணினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை வரையறுக்க முடியும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|