மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிரடிப்படைப் பாதுகாப்பு!

Thursday, September 7th, 2017

நாட்டில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியிருக்கும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளிவந்த தகவல்கள் காரணமாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி பறிபோனது.

அத்துடன் பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதுடன் விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆணைக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து தற்போது விசேட அதிரடிப்ப​டை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts:


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் –அதிர்ச்சித் தகவல்கள் கூறிய ஜனாதிபத...
நடைறையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக மூன்று மாகாணங்களை உருவாக்க நிபுணர்குழு யோசனை - சரத் வீரச...
உக்ரைனில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் - உக்ரைனுக்கான இலங்கை தூதரகம் அறி...