கைதிகள் அனுபவித்த துன்பங்கள் போதும்: ரில்வின் சில்வா!

Monday, October 9th, 2017

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அநுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் முன்னெடுத்து வருகின்றனர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் அரசியல் கைதிகளின் பிரச்சினை மிகப் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மனிதநேயத்தின் பிரகாரம், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய வேண்டுமென குரல் கொடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் ஒரு சிலரை விடுதலை செய்வதற்கும், வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.இன்றும் சிறையில் இருப்பவர்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பல ஆண்டுகளாகவும், சிறைக்கைதிகளாக இருக்கின்றார்கள்.அவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்து வருகின்றோம்.

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் இன்றும் துன்பங்களை .அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அனுபவித்த துன்பங்கள் போதும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அரசிற்கு அழுத்தம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: