புதிய கருத்தாடல் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு சமகால ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது – ஊடக பிரதியமைச்சர் கருனாரட்ன பரணவித்தாரன!

Friday, December 16th, 2016

உரிமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் நாட்டில் புதிய கருத்தாடல் ஒன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பு சமகால ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக பிரதியமைச்சர் கருனாரட்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார்.

தேசிய வானொலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே பிரதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்தாமல் சுதந்திர ஊடகத்தை நாட்டில் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தம்மை விட்டு விலகிச் சென்ற அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சிலர் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சமகால நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தி அதை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

ஊடகம் தொடர்பில் அரசாங்கம் தெளிவான தூர சிந்தனையை கொண்டுள்ளது. இது நல்லாட்சி அரசாங்கம் தேர்தலின் போது வழங்கிய உறுதிமொழியாகும். ஊடகங்கள் அரசியல்வாதிகளை விமர்ச்சிக்கலாம். அரசியல்வாதிகளும் ஊடகங்களை விமர்சிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். எனினும் ஊடகத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு உரிமையில்லை. நாட்டில் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக எடுத்துக் கூறுவதற்கு பல்வேறு நபர்களும் குழுக்களும் முயற்சித்து வருவகின்றனர். அரசாங்கம் நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து வருகின்றது.  அதேவேளை, நாட்டின் ஆட்சிக்கு தடை ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

76079

Related posts:

குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இன்மையே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் - வீதி பாதுகாப...
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...
வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு, புதிய தேர்தல் முறை மாற்றம் என்பன கொண்டுவரப்படும் - ஜனாதிபதி ...