குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தகவல்!

Monday, December 14th, 2020

நெடுந்தீவு குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவையில் குமுதினிப் படகின் சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகு போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் கண்காணிக்கப்படும் நெடுந்தாரகைப் படகின் பராமரிப்பு செலவீனங்கள் அதிகமாக காணப்படுவதனைக் காரணம் காட்டி நெடுந்தீவு இறங்கு துறையில் குறித்த நெடுந்தாரகை படகு நீண்ட நாட்களாக தரித்து நின்றது.

இந்நிலையில் புரவிபுயலின் பின்னர் நெடுந்தீவக்கான போக்குவரத்தை மேற்கொள்ளும் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் கடந்த வாரம் நெடுந்தாரகை படகு சேவையினை ஆரம்பித்தது.

ஆனாலும் குறித்த படகில் ஏற்பட்ட பழுது காரணமாக சேவையினை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. இதேநேரம் பழுதடைந்திருந்த குமுதினிப் படகு திருத்தம் செய்யப்பட்டு தற்போது நாளாந்தம்  3 தடவைகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக குமுதினிப் படகு ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் 3 சேவையினை வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் குமுதினிப்படகு சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரகை படகினை மக்கள் போக்குவரத்து சேவையில் இரண்டு தடவைகள் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் நெடுந்தாரகை படகு தனது சேவை நாட்டிளில் 07.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு பின்னர் 09.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்டும் என்றும் அதன் பின்னர் மாலை 02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்த புறப்பட்டு மாலை 04.30 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: