குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது!

Saturday, June 5th, 2021

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 29 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதன்போது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களமும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய இந்த கைது நடவடிக்கையில் தொழிலுக்குப் பயன்படுத்தி 11 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் குடாரப்பு கடற்பரப்பு,  கடற்கரையில் வைத்து மன்னார் மற்றும் கல்பிட்டி மீனவர் 29 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: