நாளை தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்

Wednesday, March 23rd, 2016
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் சபையில் இன்றும், நாளையும் ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையை விளக்கி அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விளக்கவுரையொன்றை ஆற்றியிருந்தார்.
இது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரியிருந்தனர்.
இதற்கமைய இன்றும் நாளையும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புத் தொடர்பான அமைச்சரவை உபகுழு தயாரித்த விசாரணை அறிக்கையும் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதேநேரம், நாளை வியாழக்கிழமை தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் இது சமர்ப்பிக்கப்படவிருந்தபோதும் வடமாகாண சபையில் அனுமதி வழங்கப்படாமையால் இது பிற்போடப்பட்டிருந்தது.
இதற்கு வடமாகாண சபை அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில் நாளையதினம் தகவல் அறியும் சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: