ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடப்பட்டது!

Friday, June 28th, 2019

சஹ்ரான் ஹாசிமின் உரைகள் தொடர்பில் 51 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்தை ஒருமாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரனை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் உட்பட இரண்டாயிரத்து 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

236 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 186 பேர் தடுத்து வைக்கும் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் மூவர் அவசரகால சட்டத்தின் கீழும் 186பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

425 பேரில் 263 பேருக்கு வழக்கு பதிவு செய்யக்கூடியநிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கு சட்டமா அதிபருக்கு விடயங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 42 பேர் தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.

7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவில் 79 பேர் இருக்கின்றனர். இவர்கள் முக்கிய தவறு இழைத்தவர்கள் ஆவர். டிடிஜ பிரிவில் 29 பேர் இருக்கின்றனர். கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவில் 29பேர் இருக்கின்றனர்.

முக்கிய சந்தேக நபர்கள் தகவல்களுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று சஹ்ரானின் விரிவுகளை தொடர்புபட்ட 59 பேர் இருக்கின்றனர்.

இந்த விடயங்களில் அரசியல் நடவடிக்கைகளை பயன்படுத்துபவர்களும் சிலர் இருக்கின்றனர். இவர்கள் நாட்டின் இஸ்திர தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: