குடாநாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

Tuesday, May 3rd, 2016

குடாநாட்டில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், கடந்த இரண்டு நாட்களில் விலையானது சடுதியாக அதிகரித்து 50 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. செய்கூலி, சேதாரமற்ற கட்டித்தங்கமே இவ்வாறு விற்கப்படுகின்றது.

எதிர்வரும் 9ஆம் திகதி அக்ஷயதிருதியை கொண்டாடப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தங்கத்தின் விற்பனையானது அதிகரித்துக் காணப்படும். அதனை எதிர்வுகொண்டு தற்போது தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளதாக மக்கள் தரப்பால் கூறப்பட்டது.

ஆனால், தாங்கள் கொள்முதல் செய்யும் தங்க பிஸ்கட்களின் விலையானது இலங்கைச் சந்தையில் அதிகரித்துள்ளமையால் விலை அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: