மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவடிக்கை!
Tuesday, August 15th, 2023புதிய பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய தவணைக் கடன் நிலுவையில் உள்ளதால், அனைத்து பேருந்துகளிலும் நிலையான வருமானம் பெறுவது கட்டாயமானதாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற 120 புதிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இலங்கை போக்குவரத்து சபையில் மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முக்கியஸ்தர்களின் வாகனங்களையும் சோதனையிடலாம் - ஜனாதிபதி பணிப்பு!
வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...
தளர்த்தப்பட்டது இரசாயன உர இறக்குமதிக்கான தடை – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்த...
|
|