காலஞ்சென்ற சிற்சபேசக் குருக்களின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!

Tuesday, August 16th, 2016

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஐயர் சிற்சபேசக்குருக்களின் (மணிஐயர்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு பொரளை ரேமன்ட் மலர்ச்சாலையில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (16) அங்குசென்ற செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி செய்தார்.

இதனிடையே அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் கடந்த 60 வருடங்களாக இறை பணியாற்றிவந்த காலஞ்சென்ற சிற்சபேசக்குருக்கள்  நேற்று திங்கட்கிழமை காலமானார்.

அன்னாரின் இழப்புக்கு பலதரப்பட்டோரும் தமது இறுதி அஞ்சலியை தெரிவித்துள்ள அதேவேளை இறுதிக் கிரியைகள் இன்றையதினம் கனத்தை இந்து மயானத்தில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF1695

DSCF1693

DSCF1698

DSCF1699

DSCF1700

Related posts: