முன்னாள் நீதவானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Saturday, July 20th, 2019

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக யானை குட்டியை வைத்திருந்தமை தொடர்பில் பணித் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளரான உபாலி பத்மசிறி, அந்தத் திணைக்களத்தின் எழுதுவினைஞர் பிரியங்கா சஞ்சீவனி மற்றும் அந்த யானைக் குட்டியின் முன்னைய உரிமையாளரான சந்திரரத்ன பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி டுசகுராடு என்ற யானை குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்ததால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக கூறி சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts:

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சைகள் ...
தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - தொழில் அ...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...