அஸ்பெஸ்டோஸ், பொலித்தீன்களை கட்டுப்படுத்தும் யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 7th, 2016

சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எஸ்பெஸ்டோஸ் (asbestos) இறக்குமதி மற்றும் பாவனையை இலங்கையில் கட்டுப்படுத்தல் குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிட்டியுள்ளது.

பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களின் மூலப் பொருளாக எஸ்பெஸ்டோஸ் கனியவளம் பயன்படுத்தப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் மூலம், புற்றுநோய் காரணியாக இனங்காணப்பட்ட நீல எஸ்பெஸ்டோஸ் (Crocidolite) இலங்கையில் இறக்குமதி 1987ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டது.

இன்று இலங்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெள்ளை எஸ்பெஸ்டோஸ் (Chrysolite) வகையினங்களும் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை எஸ்பெஸ்டோஸ் வகையினங்கள் அதிகமாக கூரை தகடுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

அதனடிப்படையில் வெள்ளை எஸ்பெஸ்டோஸ் பயன்படுத்துவதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை இலாபகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு எஸ்பெஸ்டோஸ் பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை 2018-01-01ஆம் திகதியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கும், 2020-01-01ஆம் திகதியில் இருந்து குறித்த உற்பத்திகளை முற்றுமுழுதாக அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும், அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, உக்கிச் செல்வதற்கு அதிக நாட்கள் எடுக்கும் பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் வகை உற்பத்திகள் சூழலுக்கு சேர்வதன் மூலம் ஏற்படும் சூழலியல் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதன் தேவை மற்றும் பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றுடன் இணைந்த தொழிற் துறைகளில் அதிகமானவர்கள் பணிபுரிதல் ஆகிய காரணங்களை கருத்திற் கொண்டு இலங்கையினுள் பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் உக்காத பிலாஸ்டிக் பாவனை தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் செயற்றிறன் மிக்க திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.  குறித்த இரு யோசனைகளும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

96457447Untitled-1

Related posts: