கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்!

மே மாதம் இரண்டாம் திகதி கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மே மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்கான திட்டமிடல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மே 8ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு இரண்டாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என வெளியிடப்பட்ட இரண்டாவது வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வைபவ ரீதியாக இரண்டாவது அமர்வு நடத்தப்பட உள்ளது. கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் சட்டசிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. நாடாளுமன்றம் கூடும் நேரம் இதில் குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில் நேற்று இரண்டாவது வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|