கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Wednesday, March 11th, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.

ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர...
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற...
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு – ஒரு வயதை அடைவதற்கு முன்னரே 2,500 குழந்தைக...