அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Sunday, March 17th, 2019
அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.
சில அரசியல் கட்சிகளிடமிருந்து சிறந்த பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்படி கட்சியின் யாப்பு, கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை மற்றும் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் சபை உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவுள்ளன.
Related posts:
யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு - சுகாதார அதிகாரிகளுக்கு வட...
பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி...
பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் - கல்வி அமைச்சர் சுசில் பிரே...
|
|
|
அதிகரித்து வரும் வீதி விபத்து - அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இரா...
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கு புதிய வழிகாட்டல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெர...
வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற ஒன்றுபட்டுச் செயற்படுவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!


