கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகல் – மகஜரை ஒன்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கையளிப்பு!

Monday, December 4th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள்  விலகியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது.

நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 1 ஆம் திகதி முதல் நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும்  ஆ திகதி வரை நடைபெறவுள்ளது.

தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பாடசாலை பாடவிதானத்தில் இருந்து வரலாற்றுப் பாடத்தை நீக்குவதற்கு எந்த தீர்மானமும் இல்லை - தேசிய கல்வி ...
கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் - கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆள...
ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - ப...