ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து!

Saturday, February 17th, 2024

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதகரகத்திடம் பிரித்தானியா தமது வலியுறுத்தலை விடுத்துள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் எதிர்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மரணமானதாக சைபீரிய பிராந்திய சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை வெளிப்படையாக விமர்சிப்பவராக அவர், செயல்பட்டார் என்ற கருத்து பரவலாக உள்ளது.

இதன் காரணமாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அவர் சிறையடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவரது மரணம் தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


நாடாளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு - நாடாளுமன்ற அலுவல்கள் பற்...
சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தை கண்டித்து நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ...
யாழ் - மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது - மாவட்ட அரச அதிபர் சிவப...