சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தை கண்டித்து நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Friday, August 25th, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 22 ஆம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

இதனால் போராட்டம் இடம்பெற்ற நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


ஓ நெகடிவ் குருதிக்கு யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு! குருதிக் கொடையாளர்களே உங்களின் கவனத்திற்கு!
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் விரைவில் நியமனம் – துறைசார் அமைச்சுகளுக்கு ஜனாத...