ஜனாதிபதியை தெரிவுசெய்ய மட்டுமல்ல பிரச்னைகளின் தீர்வுக்காகவும் வாக்களித்துள்ள அமெரிக்க மக்கள்!

Wednesday, November 9th, 2016

அரசியல்வாதிகளை தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதை தவிரஇ மற்ற பல பிரச்சனைகளில் தங்கள் கருத்துக்களை பல அமெரிக்க மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கலிஃபோர்னியா மற்றும் மஸச்சூசெட்ஸ் ஆகியவை உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் மரிவானா போதைப்பொருளை பொழுது போக்கு ரீதியாக பயன்படுத்த ஒப்புதல் தீர்மானம் வழங்குவதா என்பது குறித்து மக்கள் வாக்களிக்கின்றனர்.

ஃபுளோரிடா மற்றும் வேறு நான்கு மாநில மக்கள் மாரிவானா போதைப்பொருளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தலாமா என்பது தொடர்பாக வாக்குப்பதிவு செய்கின்றனர்.

இதனை தவிர மற்ற இடங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதா என்பது தொடர்பாகவும் அமெரிக்காவில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாகவும் மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related posts: