கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருகின்றது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 21st, 2023

பலதரப்பு முகவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மக்களுக்கு சலுகைகளை வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த திறைசேரியும் அரசாங்கமும் அயராது உழைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அரசியல் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வை வழங்காது என்றும், நாடு முன்னேற அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: