கடந்த இரண்டு மாத வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழப்பு – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

இந்த வருடம் நாட்டில் பதிவாகியுள்ள 434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்தில் இதுவரை பதிவான 434 விபத்துக்களில் 177 மோட்டார் சைக்கிள்கள், 65 லொறிகள், 58 முச்சக்கர வண்டிகள் மற்றும் 28 வான்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 148 பேரும், பாதசாரிகள் 146 பேரும், வாகனங்களில் பயணித்த 56 பேரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் 861 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வருடம் வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களெனவும், வாகனம் ஓட்டுவதற்கு பங்களிக்காத பயணிகளும் பாதசாரிகளும் மோட்டார் விபத்துக்களில் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 43 வீதி விபத்துக்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த வாரத்தில் 120 வாகன விபத்துக்களில் நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 173 விபத்துகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|