ஒகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Saturday, July 30th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலைகளுக்கு அண்மையில் சிகரட், மதுபானம் விற்கத் தடை!
புதிய அறிகுறிகளோடு சிறுவர்களை தாக்கும் கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் பிரித்தானியா!
மத்திய வங்கியோ அல்லது நிதி அமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே பொருத்தமானது - ...
|
|
|


