பாடசாலைகளுக்கு அண்மையில் சிகரட், மதுபானம் விற்கத் தடை!

Friday, May 26th, 2017

பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு அண்மையில் சிகரட், மதுபானம் விற்பனை செய்வதைத்தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்துள்ளார்.

இதன் பிரகாரம் பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 500 மீட்டர் வரையான எல்லைப்பகுதிக்குள் சிகரட் மற்றும் மதுபானம் என்பவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்படும்.அத்துடன் பொது இடங்களில் சிகரட் பிடிப்பதைத் தடை செய்யவும், சிகரட் மதுபானம் என்பன விற்பனை செய்வது தொடர்பான கட்டுப்பாடுகளை விளக்கும் பதாகைகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தவும் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூவர் கொண் அமைச்சரவை உபகுழுவொன்றை அமைத்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.தற்போது ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, குறித்த அமர்வில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்

Related posts: