சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் மீட்பு!

Tuesday, November 1st, 2016

துருக்கியிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு விமான தபால் மூலம் கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் ஒளடதப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தபால் பரிமாற்ற புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த மருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொலஸ்டரோல், நீரிழிவு போன்ற நோய்களுக்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த மருந்துப் பொருட்களின் மொத்த பெறுமதி பத்து இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்துப் பொருட்களின் உற்பத்தி திகதி, கலாவதித் திகதி மற்றும் தொடரிலக்கம் என்பன துருக்கி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருந்துப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நபரை பொலிஸ் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

Related posts:


மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பாக முறையான வேல...
டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசு...
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை மையப்படுத்தி அமெ...