ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு!

Wednesday, December 14th, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றுள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த அக்டோபர் 5ம் திகதி இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயரலராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலராக ஆன்டோனியோ கட்டரஸ் நேற்று பதவியேற்றார்.

193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9வது பொதுச் செயலாளராக கட்டரஸிற்கு, பான் கிமூன் பதவியேற்பு செய்து வைத்தார். ஆன்டோனியோ கட்டரஸ் ஐ.நா.,வின் 9 வது பொதுச்செயலர் ஆவார்.

17530309631174140931ceb3

Related posts: