அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்கா!

Saturday, June 2nd, 2018

அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி மீதான அதிகரித்த வரியை அமெரிக்கா அமுலாக்கியுள்ளது.

கனடா, மெக்சிக்கோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு மற்றும் அலுமினியத்தை அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.

இதற்கமைய இரும்புக்காக 25 சதவீத வரியும், அலுமினியத்துக்காக 10 சதவீத வரியும் அறவிடப்படவுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பில் ஏற்றுமதி நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

எனினும் உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்  அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts: