எந்தவொரு நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் – பசில் ராஜபக்ச அறிவிப்பு!

எந்தவொரு நேரத்திலும் தேர்தல்களை எதிர்நோக்க தாமும், தமது கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் ஒன்றை நடத்துவதே கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலை வெகு விரைவில் நடாத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களையே விரைவில் நடாத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் 9 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது முதலாவது தேர்தல் பிர்ச்சாரக் கூட்டத்தை நடாத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துவது குறித்த திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் மகளிர் அணிகளை வலுப்படுத்தும் திட்டங்கள் எதிர்வரும் வார இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|